புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் வாவிபாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி தேவி (வயது 26). பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 7 வருடமாகிறது. 5 வயதில் மகன்
உள்ளான்.

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறை தொடர்ந்து தேவி தனது கணவரை விட்டு பிரிந்து விட்டார்.

பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் என்பவருடன் வாழ்ந்து வந்தார். நேற்று மதியம் தேவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மது குடித்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்த தேவி அந்த போதை போதாதென்று பான்பராக்கும் போட்டதாக தெரிகிறது.

இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வசந்த் பதறிப்போனார். உடனடியாக தேவியை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என்று கூறினார்கள்.

இது குறித்து பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் விசாரித்து வருகிறார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top