புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நபர் மதுபோதையில் வெசாக் வெளிச்சக் கூடுகளை ஏற்றி வந்த பொலிஸ் வாகனத்தின் முன்னால் திடீரென பாய்ந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி பகுதியில் நேற்று இடம்பெற்ற இவ் விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரவு 9.0 0மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மாவடிமுன்மாரி, விடுதிக்கல் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு ஜெயக்குமார் (26வயது) என்பவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top