நம்முடைய சோம்பேறித்தனம் மற்றும் ஞாபகமறதி சில நேரங்களில் பெரிய இழப்பை ஏற்படுத்தும். இப்படியொரு அனுபவம் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த மார்க்குஸ் பட்லர் (வயது 75) என்ற முதியவருக்கு ஏற்பட்டது.
இவர் அங்குள்ள இயற்கை வளம் கொஞ்சும் ஏரிக்கு காரில் சென்றார். அதை விட்டு கீழே இறங்கிய அவர் 'ஹைண்ட் பிரேக்' போட மறந்து விட்டார். அதோடு கார் கதவையும் வேகமாக மூடினார்.
இதனால் ஏற்பட்ட கடும் அதிர்வு காரணமாக கார் தானாக நகர்ந்து ஏரிக்குள் சென்று தண்ணீரில் மூழ்கியது. அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ் உதவியை நாடினார்.
பொலிசாரும் விரைந்து வந்து காரை கயிறுகட்டி வெளியே எடுத்தார்கள். அதன்பிறகு முதியவருக்கு மற்றொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. ஏரியில் இருந்து காரை வெளியே எடுத்த பணியில் ஈடுபட்டவர்களுக்கு வழங்குவதற்காக அவரிடம் இருந்து போலீசார் ரூ.11/2 லட்சத்தை அபராதமாக வசூலித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக