வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த 19 வயது சிறுவன் தனது செல்ல நாயை சுத்தியால் அடித்தும் கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்துள்ளான். அவனுக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை மான்செஸ்டரை சேர்ந்தவன் Sean Deakin வயது 19.
சமீபத்தில் மிக ஆசையுடன் உயர்ரக ஸ்டாபோர்ட் ஷயர் புல் டெரியர் வகையை சேர்ந்த ஆண் நாய் ஒன்றை வாங்கினான். அதற்கு டைசன் என்று பெயரிட்டு ஆசையாக வளர்த்து வந்தான்.
இந்நிலையில், வேலை தேடி பல இடங்களில் சீன் அலைந்தான். எங்கும் வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்தான். அதனால் செல்லமாக வளர்க்கும் நாய் மீது வெறுப்பை காட்டினான்.
படுக்கையில் டைசன் சிறுநீர் கழித்து வந்ததால் சீனுக்கு ஆத்திரம் அதிகரித்தது. சுத்தியை எடுத்து நாயின் மண்டையில் பல முறை அடித்தான். கத்தியால் அதன் மார்பில் குத்தி சித்ரவதை செய்து கொலை செய்தான்.
இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சீனை விசாரணைக்கு அழைத்து சென்றனர். முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த அவன் இறுதியில் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.
சீன் சுத்தியாலும் கத்தியாலும் கொடூரமாக தாக்கியதில், 8 மணி நேரம் டைசன் உயிருக்கு போராடி துடிதுடித்து இறந்தது தெரிய வந்துள்ளது. அவன் மீது மிருக வதை தடை சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த மான்செஸ்டர் நீதிமன்றம், சீனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
0 கருத்து:
கருத்துரையிடுக