புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சோவியத் யூனியன் என்ற உலக வல்லரசை அமைத்துக் காட்டிய கம்யூனிச தலைவர் லெனினின் உடலை புதைக்க ரஷிய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.1924-ம் ஆண்டு தனது 53-வது வயதில் உயிரிழந்த விளாதிமிர் லெனினின் உடல் 88 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. உடல்
கெடாமல் இருக்க தைலமிடப்பட்டு மக்கள் பார்க்கும் வகையில், மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கம் அருகே வைக்கப்பட்டுள்ளது.

சோவியத் யூனியன் சிதைந்துபோன பிறகும் 20 ஆண்டுகளாக அவரது உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடலை புதைத்து விட ரஷிய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

“லெனினுக்கு விடை கொடுக்க வேண்டும். அவரது உடலுக்கு ஓய்வு அளிக்காமல் இருப்பது பொருளற்ற செயலாகும்’ என்று ரஷிய பண்பாட்டுத் துறை அமைச்சர் விளாதிமிர் மெதின்ஸ்கை தெரிவித்தார். இவர் அதிபர் விளாதிமிர் புதினுக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். லெனினுக்கு முறைப்படி அரசு மற்றும் ராணுவ மரியாதை வழங்கி, மதிப்புக்குரிய பகுதியில் புதைக்க வேண்டும் என்றும் மெதின்ஸ்கை தெரிவித்தார். மேலும் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த கட்டடம் சோவியத் வரலாற்றைக் கூறும் அருங்காட்சியகமாக மாற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்மூலம், ரஷிய அரசு லெனினின் உடலை புதைக்க முடிவு செய்துவிட்டதாகவே தெரிகிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள லெனினின் தாயாரின் சாமாதி அருகே அவரது உடலும் புதைக்கப்படும் என்று தெரிகிறது.

உலகின் முதல் பாட்டாளி அரசை நிறுவியவரும் போல்ஸ்விக் கட்சியின் பிதாமகருமான லெனின், தன்னை ஒரு சாதாரண கல்லறையில்தான் புதைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top