கள்ளக் காதல் விவகாரம் குடும்ப வாழ்க்கையில் பெரிய பிளவை ஏற்படுத்துவதுடன், விவாகரத்து, கொலை போன்ற கொடூரமான செயல்கள் வரை கொண்டு சென்று விடும்.இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கார்லி பிராஸ்கி(வயது 32) என்ற பெண் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டார். இதற்கு காரணம்
அவளது கணவரே ஒருநாள் தனது மனைவியிடம் தனது கள்ளக் காதல் விவகாரத்தை ஒப்புக்கொண்டார்.
அவர் கூறுகையில், உன்னுடைய நெருங்கிய தோழியுடன் 18 மாதமாக பழகி உள்ளேன். அவள் கர்ப்பிணியாக நானே காரணம் என்று சொல்லி விட்டார்.
இதன் விளைவு 7 மாத குழந்தையின் தாயாகிய கார்லியை போதைப் பொருள் அடிமையாக்கி விட்டது. சில நாட்களுக்கு முன்பு அவள் தனது கணவரின் மீதான வெறுப்பில் 7 மாத குழந்தையை மூச்சு திணற வைத்து கொன்றார்.
பிளேடினால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கார்லி பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டுள்ளதால் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகே விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக