புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தூத்துக்குடியில் பாலியல் தொல்லை செய்த கணவனை கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி போலீசில் சரண் அடைந்தார்.தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள செம்புலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் அசுபதி செல்வம்(35). மரம் வெட்டும் தொழிலாளி. அவரது மனைவி இசக்கியம்மாள்.
அவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளன. அசுபதி செல்வத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வதுடன் இயற்கைக்கு மாறாக உறவுக்கு அழைத்து செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இசக்கியம்மாளுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக அசுபதி சந்தேகப்பட்டார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே இசக்கியம்மாள் தனது உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அசுபதி தஞ்சம் அளித்த உறவினரை கொலை செய்ய முயற்சி செய்தார். பனையேறும் தொழிலாளியான அந்த நபரை கொலை செய்வதற்காக அசுபதி அரிவாளுடன் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உறவினர் வீட்டில் இசக்கியம்மாளை நேற்று முன்தினம் இரவு குடும்பம் நடத்த அழைக்க சென்றார். அப்போது அவர் வர மறுக்கவே தகராறு ஏற்பட்டது. சந்தேகப்புத்தி மற்றும்  பாலியல் தொல்லையால் வேதனை அடைந்திருந்த இசக்கியம்மாள் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் அசுபதியின் மண்டையை உடைத்தார். இதில் இரத்த வெள்ளத்தில் மிதத்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடனே இசக்கியம்மாள் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அசுபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து இசக்கியம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top