புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தி தொலைக்காட்சி நடிகை ருச்சா குஜராத்தியை அவரது கணவரும் மாமனாரும் வரதட்சனை கேட்டு மோசமாகக் கொடுமைப்படுத்தியதாக காவல்துறையிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.2010ம் வருடம் அக்டோபர் மாதம் தொழிலதிபர் மிட்டல் சாங்கவியை நடிகை ருச்சா
குஜராத்தி திருமணம் செய்துகொண்டார்.

இவருடைய திருமண வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாகவே புயல் வீசி வருவதாக கிசு கிசு எழுந்தது. தற்போது அந்த தகவல் உண்மையாகியுள்ளது.

ரிச்சாவிற்கு பிரச்சினை தேனிலவின் போதே தொடங்கிவிட்டதாம். அவர்களின் ஹனிமூன் செலவில் பாதியை ரிச்சா வீட்டினர் கொடுக்கவேண்டும் என்று மிட்டல் குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.அப்போது தொடங்கிய பிரச்சினை தற்போது படுக்கை அறையில் அடைத்து வைத்து அடித்து கொடுமைப் படுத்தும் அளவிற்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே தன்னுடைய செலவிற்கு ரிச்சா பணம் கொடுத்து வந்துள்ளார். இருப்பினும் ரிச்சாவின் சேமிப்பில் இருந்து பணத்தை கேட்டு மிட்டலும் அவரது தந்தையும் தலைமுடியை பிடித்து அடித்து கொடுமைபடுத்தியுள்ளனர். இதில் ரிச்சாவின் உதடு கிழிந்துபோனதாகவும் இதனையடுத்தே ரிச்சாவின் மாமியார் போலீசில் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து ரிச்சாவின் வீட்டிற்கு வந்த போலீசார் அவரை வீட்டுச் சிறையில் இருந்து விடுவித்தனர். ரிச்சாவின் கணவர் மற்றும் மாமனாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top