புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தனது வயிற்றில் வளர்ந்த கருவை இரகசியமாக அழிப்பதற்காக நாட்டு வைத்தியம் செய்த குடும்பப் பெண் அதிக இரத்தப் போக்கு காரணமாக இன்று வியாழக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்.
சங்கானையைச் சேர்ந்த சந்திரதாஸ் பேபி (வயது 42) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டு உயிரிழந்தவராவர்.

இவரது கணவர் இத்தாலியில் வசித்து வருகின்றார். குறித்த பெண்மணி தனது வயிற்றில் வளர்ந்த 6 மாத கருவை அழிப்பதற்காக நாட்டு வைத்தியம் செய்துவந்துள்ளார்.

அது பயனளிக்காமல் அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டதன் காரணமாக இறுதிநேரத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் இறந்துள்ளார்.

இவரது மரணம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top