ஒரு தலையாக காதலித்த பெண் தனது காதலை ஏற்க மறுத்ததால் கோபமடைந்து அந்தப் பெண் மீது ஆசிட் வீசி விட்டு ஓடி விட்டார் ஒரு வாலிபர். படுகாயத்துடன் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம், வாழப்பாடி அருகே உள்ள பள்ளத்தானூர் என்ற பகுதியைச் சேர்ந்த 20 வயதுப் பெண் சுஜாதா. இவர் உடையாபட்டியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த24 வயது நபர் விஜயக்குமார். இவர் சுஜாதா வேலை பார்த்து வரும் மில்லில் எலக்ட்ரீசியனாக இருக்கிறார்.
சுஜாதா மீது காதல் கொண்டார் விஜயக்குமார். ஆனால் அதை அவர் நிராகரித்து விட்டார். இருந்தும் விடாமல், ஒரு தலைக்காதலாக இருந்து வந்தார். அடிக்கடி சுஜாதாவிடம் தனது காதலை ஏற்குமாறும் கூறி வந்துள்ளார். ஆனால் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார் சுஜாதா.
இதனால் கோபமடைந்த விஜயக்குமார், வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த சுஜாதா மீது ஆசிட் வீசி விட்டார். இதில் சுஜாதாவின் முகம், தலை, மார்பு என பல பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது.
அலறித் துடித்த சுஜாதாவை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆசிட் வீசி விட்டு ஓடிய விஜயக்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக