வைத்தியசாலைக்குச் சிகிச்பைப் பெறச் சென்ற தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (20) பாதுக்கை கிழக்கு கொரகல பகுதியில் இடம்பெற்றுள்ளது. குழந்தையை அலுமாரியில் வைத்து பூட்டிய தாய் ஹோமாகம வைத்தியசாலைக்குச் சிகிச்சைப் பெறச்
சென்றுள்ளார். அதன்போது குறிப்ப பெண் குழந்தை பெற்றுள்ளதை கண்டுபடித்த வைத்தியர் இது குறித்து பாதுக்கை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து பெண்ணின் வீட்டில் சென்று சோதனை நடத்திய பாதுக்கை பொலிஸார் அலுமாரியில் இறந்த நிலையில் இருந்த குழந்தையை மீட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனையை ஹோமாகம நீதவான் மேற்கொண்டு வருகிறார். குறித்த பெண் பொலிஸ் கைதின் கீழ் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதேவேளை, வவுனியாவில் பிறந்து ஐந்து நாட்களேயான சிசுவொன்று புதைக்கப்பட்டு, 15 நிமிடங்களின் பின்னர் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று பதிவானது. குறித்த சிசுவை புதைத்த குற்றச்சாட்டில் 29 வயதான தாய், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் அயலவர்களினால் குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சிசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.
பெண்ணின் கணவர் யுத்தத்தில் உயிரிழந்த நிலையில், அவரது பெற்றோரின் பாதுகாப்பில் அவரும், அவரது நான்கு வயது மகளும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், குறித்த பெண் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்துள்ள நிலையிலேயே குறித்த சிசுவுக்கு தாயாகியுள்ளார். குழந்தையை ஈன்ற பெண் அவரது வீட்டுத் தோட்டத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றுக்கு அருகில் சிசுவை புதைத்துள்ளார். இதனை கண்டுள்ள மேற்படி பெண்ணின் தாயார், அயலவர்களின் உதவியுடன் சிசுவை உயிரோடு மீட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ஓமந்தை பொலிஸார், குறித்த சிசுவை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் குறித்த பெண்ணைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் அவர் எதிர்வரும் 2ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக