புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தவர்களை அடித்து துன்புறுத்தி, எவ்வித மருத்துவ சிகிச்சையும் அளிக்காமல் கொடுமைப்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது.
AWO என்ற சமூக நல அமைப்பின் தலைவரான பால் குய்ரின் என்பவர் மேற்கு ஜேர்மனியில் ஸ்பீசென் –
எல்வெர்ஸ்பெர்க் என்ற ஊரில் முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வந்தார்.

இதில் பணியாற்றி வந்த இரண்டு பணியாளர்கள் அங்குள்ள முதியவர்கள் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இதில் ஒரு பணியாளர் மூதாட்டி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுக்காமலேயே அறுவை சிகிச்சை செய்துள்ளான். மேலும் மார்பின் எனப்படும் மருந்தை அதிகளவு கொடுத்து ஒருவரை படுகொலை செய்துள்ளான்.

மேலும் மற்றொருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவரின் ஓக்சிஜன் டியூபின் இணைப்பை துண்டித்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் கடந்த சில மாதங்களாக சுமார் 32 பேரைக் கொடுமைப்படுத்தி உள்ளனர். இவை அனைத்தும் தெரியவந்ததும், முதியோர் இல்லத்தின் தலைவர் பொலிசில் புகார் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top