மாப்பிள்ளை பிடிக்கவில்லை என கூறிய பெண்ணை மானபங்கப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சியை சேர்ந்தவர் அழகர் (22). இவர் அந்த பகுதியை சேர்ந்த பெண்ணை பெண் பார்க்க சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண், அழகரை பிடிக்கவில்லை என கூறிவிட்டாராம். இதனால் அழகர் விரக்தியடைந்தார். இந்த விஷயத்தை அழகர், சென்னை சூளைமேட்டில் வசித்துவரும் மாமா மாரிமுத்துக்கு (35) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை மேடவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அந்த பெண் வந்துள்ளார். இதுபற்றி அறிந்த மாரிமுத்து தனது உறவினர் சிலருடன் மேடவாக்கம் சென்றார். அழகரை திருமணம் செய்ய மறுத்த பெண்ணை மிரட்டியுள்ளார்.
கையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியிருக்கிறார். இதனால் அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் சகாதேவன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து மாரிமுத்துவை கைது செய்தார். ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். அவரது உறவினர்களை தேடி வருகின்றனர்
0 கருத்து:
கருத்துரையிடுக