புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மும்பையில் 10வது மாடியிலிருந்து 4 வயது சிறுமி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.கடந்த மாதம் 11ஆம் திகதியே இந்த சம்பவம் நடந்தாலும் இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர், கடந்த 2ஆம் திகதி பொலிசில் புகார்
அளித்த பின்னர்தான் இதுகுறித்து வெளியே தெரியவந்தது.

மும்பை கார்கர் 19-வது செக்டாரில் ஒரு கட்டடத்தின் 10-வது மாடியில் குழந்தைகள் காப்பகம் உள்ளது. அங்கு பாரி யாதவ் என்பவர் தனது குழந்தையை விட்டுச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 11ஆம் திகதி அந்த காப்பகத்தின் பால்கனியில் இருந்து குழந்தை கீழே விழுந்தது. எனினும் கீழே விழும்போது அடர்த்தியான மரம் ஒன்றில் விழுந்ததால் மரம் அவரைத் தாங்கிக் கொண்டது. இதனால் காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.

பாரி யாதவின் வீடும் அந்த கட்டடத்தின் 9-வது மாடியில் உள்ளது. எனினும் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால் காப்பகத்தில் குழந்தையை விட்டுச் செல்வது வழக்கம்.

இதுகுறித்து அந்த குழந்தையின் தாயார் அனுபம் யாதவ் கூறுகையில், ஜூன் 11-ம் திகதியன்று காப்பகத்தில் இருந்து எனக்கு தொலைபேசி வந்தது. குழந்தை பால்கனியில் இருந்து விழுந்துவிட்டதாக தெரிவித்தார்கள்.

மருத்துவமனைக்கு வந்து பார்த்த போது குழந்தைக்கு தொடை மற்றும் கண்ணில் காயம் ஏற்பட்டிருந்தது என்றார்.

இதுதொடர்பாக கார்கர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். அலட்சியத்தால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுபோல பொறுப்பில்லாதவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தது என்னுடைய தவறுதான் என அனுபம் யாதவ் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top