புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியில் வீட்டை காலி செய்ய சொன்ன வீட்டின் உரிமையாளர் உட்பட நான்கு பேரை, குடியிருப்பாளர் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஜேர்மனியின் தென் மேற்கு பகுதியில் உள்ள நகரம் கார்ல்ஸ்ருகி. இங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்த ஒருவர், தனது வீட்டு
உரிமையாளருக்கு நீண்ட நாட்களாக வாடகை கொடுக்காமல் இருந்துள்ளார்.

இதையடுத்து அந்த வீட்டு உரிமையாளர், அமீனா மற்றும் பூட்டை திறக்கும் தொழிலாளர் மற்றும் ஒரு பெண் ஆகியோர், சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்று வீட்டை காலி செய்ய சொல்லியுள்ளனர்.

இதையடுத்து இவர்கள் நான்கு பேரையும் அந்த குடியிருப்பாளர் பிணை கைதிகளாக பிடித்து வைத்து கொண்டார்.

இன்று காலை அந்த வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதை கேள்விப்பட்ட பொலிசார், பிணை கைதிகளை விடுவிக்க முயன்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top