14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே மாதம் 23 ஆம் திகதிக்கும் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாள் ஒன்றில் அக்குரஸ்ஸ நகரில் உள்ள சந்தேகநபருக்கு சொந்தமான விடுதியொன்றில் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
இது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவரை மாத்தறை பொலிஸ் சிறுவர் மற்றும் தனியார் மகளீர் பணியகத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
48 வயதான சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்..,
0 கருத்து:
கருத்துரையிடுக