யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மலசலகூடக் குழாயிலிருந்து குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட சிசுவொன்றின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
அடைப்பு ஏற்பட்டிருந்த இம்மலசலகூடக் குழாயை துப்பரவு செய்து கொண்டிருந்த போது குழாயிலிருந்து அழுகிய நிலையில் இச்சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ். பொலிஸார் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
குறைமாதத்தையுடைய இச்சிசுவின் சடலம் இரண்டு வாரங்களுக்கு முன்னர்; பிரசவிக்கப்பட்டு இம்மலசலகூடக் குழாயினுள் போடப்பட்டிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணையை யாழ். பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக