புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தன்னை 3-வது கணவரிடம் இருந்து பிரித்து 4-வது திருமணம் செய்து கொள்ளக் கோரி, பெற்றோர் வற்புறுத்துவதாக ஆட்சியரிடம் பெண் புகார் அளித்தார்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி சாணார் தெருவைச் சேர்ந்தவர் சி.தியாகராஜன் (29). இவரது மனைவி தி.கலாதேவி (23). இவர், கணவர்
தியாகராஜனுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணத்தை சந்தித்து தனது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தார். அவர் அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது தந்தை கண்ணன், தாய் பூங்கொடி சகோதரர்கள் பாபு, ராதாகிருஷ்ணன். எனது பெற்றோர் என்னை 13 வயதிலேயே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால், திருமணமான ஓராண்டில் நீ அவரோடு வாழ்ந்தது போதும் எனக் கூறி காரணமே இல்லாமல் பிரித்துக் கூட்டி வந்தனர். பின்னர், ஓராண்டு கழித்து 14 வயதில் ஆத்தூரைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அப்போது எனது கணவரிடம் இருந்து கடனாக பணம் கேட்டனர். அவர் தராததை அடுத்து என்னை மீண்டும் 6 மாதத்தில் பிரித்து கூட்டி வந்தனர். இதையடுத்து, கடந்த 8 ஆண்டுகளாக வீட்டில் இருந்த என்னை தகாத முறையில் பணத்தை ஈட்டிக் கொடுக்கக் கூறி வற்புறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், மேச்சேரியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியதால், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் அவரைத் திருமணம் செய்து கொண்டேன். தற்போது எங்களுக்கு தருண் என்ற 11 மாதக் குழந்தை உள்ளது.

அப்போது, கட்டட வேலைக்கு சென்று எனது கணவர் போதிய அளவு பணத்தை சம்பாதித்து வந்தார். அவரிடம் கடனாக ரூ. 7 லட்சம் பணம் கொடு திருப்பிக் தருகிறோம் எனக் கூறி எனது பெற்றோரும், சகோதரர்களும் வாங்கிச் சென்றனர். பணத்தை அவர்கள் வாங்கி ஓராண்டு ஆகியுள்ள நிலையில், எனது கணவர் அவர்களிடம் பணத்தை வாங்கி வருமாறு கூறினார்.

இதையடுத்து அவர்களிடம் பணத்தை கேட்ட போது, அவருடன் இனிமேல் நீ வாழ வேண்டாம். மரியாதையாக திரும்பி வந்து விடு உனக்கு வேறு ஒரு திருமணம் செய்து வைக்கிறோம் எனக் கூறி துன்புறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கடந்த மே 15-ம் தேதி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து கெங்கவல்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், எனது கணவரிடம் இருந்து என்னை பிரித்து 4-ம் திருமணம் செய்து வைத்து தொடர்ச்சியாக எனது வாழ்க்கையை சீர்குலைக்கும் நோக்கில் எனது பெற்றோர் செயல்பட்டு வருகின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எங்களது பணத்தைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top