புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாயால் ஏற்பட்ட தகராறில் அயல் வீட்டுக்கரை கிரிக்கெட் மட்டையால் தாக்கியது தொடர்பாக கொக்குவிலுள்ள பிரபல பாடசாலையென்றின் அதிபருக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இச்சம்பவம் கடந்த
ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் கொக்குவில் நந்தாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பொ.சண்முகநாதன் வயது 58 என்ற வர்த்தகரே அதிபரது தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்தவராவார்.

அதிபர் தனது வீட்டில் வைத்திருக்கும் நாயைக் கட்டி வைக்காததினால் குறித்த வர்த்தகர் வீட்டிற்கு வருகின்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதாலேயே இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதன்போது அதிபர் பொறுப்பற்ற விதத்தில் வர்த்தகரை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதோடு, முதுகுப்பகுதியில் காலால் பலமாக உதைந்துள்ளார்.

இத்தாக்குதல் காரணமாக படுகாயமடைந்த வர்த்தகர், சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top