புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிறந்து ஆறு நாட்களேயான பெண் சிசுவை விற்பனை செய்ய முயற்சித்த சிசுவின் தாய், தந்தை மற்றும் உதவியாளர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

புத்தளம் - பாலாவி - மல்கஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று புத்தளம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வீட்டில் இருந்த தனது 6 நாள் குழந்தை கடந்த 13ம் திகதி மாலை களவாடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.

இது குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், தனது குழந்தையை வளர்க்க தகுதியற்று குறித்த நபர் சுய விருப்பத்துடன் மற்றுமொரு நபரின் உதவியுடன் பலபிட்டி பகுதியில் உள்ள தம்பதியினருக்கு விற்பனை செய்துள்ளார். குழந்தையை பெற்றுக் கொண்டவர்கள் பணம் கொடுக்கத் தவறியதால் புத்தளம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தனது சிசுவை காணவில்லை என குறித்த நபர் பொய் முறைப்பாடு செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொய் முறைப்பாடு செய்தமை, சிசுவை விற்க முயன்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் குறித்த நபரும் அவரது மனைவியும் உதவியாளரும் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிசு தற்போது புத்தளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (17) புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top