அரக்கோணம் அதவுல்லா சாகிப் தெருவில் ஒரு வீட்டில் நேற்று முன்தினம் மாலை தீனதயாளன் என்பவரது மகள் ஷர்மிளா (வயது22), அகன் நகரை சேர்ந்த சதயதுல்லா என்பவரது மனைவி ஆஷா (24), அரக்கோணம் அருகே பள்ளூரை சேர்ந்த மாதவன் (24), ஆகிய 3 பேரும் கழுத்து அறுபட்ட நிலையில்
உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதில் ஆஷா, மாதவன் இருவரும் ஒரு அறையில் நிர்வாண நிலையில் கழுத்தறுக்கப்பட்டு உடல் மீது தீ வைக்கப்பட்டிருந்தது. போலீசார் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது ஆஷா இறந்தார். மற்ற 2 பேரும் அதே ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் வாலிபர் மாதவன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஷர்மிளா, ஆஷா, மாதவன் ஆகிய 3 பேரும் அரக்கோணத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தவர்கள் என்பது தெரியவந்தது.
மாதவன், ஆஷா இருவரும் ஒரே கல்லூரியில் படித்த போது காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆஷாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இதனால் ஷர்மிளாவின் வீட்டில் சந்தித்து இருவரும் உல்லாசமாக இருந்த போது கழுத்து அறுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக ஆஷாவின் கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷர்மிளாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க சென்ற போது சம்பவம் நடந்துள்ளது.
இதனையடுத்து அவருக்கு வேறு ஏதாவது காதல் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், டி.எஸ்.பி. சீத்தாராமன், இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம் ஆகியோர் நேற்று சம்பவ இடத்தில் இருந்து கொலை செய்யப்பட்ட மாதவனின் செல்போனை கைப்பற்றினர். அதன் மூலம் மாதவனோடு யார்? யார்? தொடர்பு கொண்டார்கள். என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கொலை சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் கூறுகையில், கொலையாளிகள் யார் என்பது குறித்து துப்பு துலங்கி உள்ளது. குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். விரைவில் அவர்களை கைது செய்து விடுவோம் என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக