புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வீட்டை விற்பதற்காக ஒரு பெண், தனது கணவர் வேறொரு பெண்ணுடன் ஓடியதை விளம்பரப்படுத்திய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்தவர் எல்லி ஸோபர் (37). இவருடைய கணவர், 22 வயதான யோகா ஆசிரியருடன் தவறான உறவு
கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த ஸோபர், தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார்.

இதையடுத்து தற்போது தானும், தனது கணவரும் சேர்ந்து வசித்த வீட்டை விற்க தீர்மானித்த ஸோபர் அதற்காக புது யுக்தியை கையாண்டுள்ளார். தனது வீட்டுக்கு வெளியே வீடு விற்பனைக்கு என்று விளம்பரப்பலகை வைத்தார்.

அந்தப் விளம்பரப்பலகையில் எழுதியிருந்த வாசகங்கள்:

22 வயதுப் பெண்ணுக்காக எங்களை விட்டு விட்டார் எனது கணவர். இந்த வீடு விற்பனைக்கு உள்ளது. தனியாக நிற்கும், சற்றே மனக் கசப்புடன் இருக்கும், பெண்ணாகிய நான், எனது கணவரின் கள்ளக்காதலால் இந்த வீட்டை விற்கும் நிலைக்கு வந்து விட்டேன்.

வாங்க விரும்புவோர் அணுகலாம், பாலியல் ரீதியான அணுகுமுறைகளைக் கண்டிப்பாக தவிர்க்கவும் என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இரு மகள்களும் கூட தாயாரின் இந்த விளம்பரத்துக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இந்த விளம்பரத்தை நிறையப்பேர் பதில் அனுப்பியுள்ளனராம்.

அவர்களில் பலரும் ஸோபரின் கணவரை சரமாரியாக திட்டியுள்ளனர். பேசாமல் அவரைக் கொன்று வீட்டுத் தோட்டத்தில் புதைத்திருக்கலாமே ஸோபர் என்றும் ஒரு பதில் வந்ததாம். அதேசமயம், எதிர்மறையான விமர்சனங்களும் வந்துள்ளன.

எப்படியும் 3 பெட்ரூம் கொண்ட இந்த வீட்டுக்கு கண்டிப்பாக நல்ல விலை கிடைக்கும் என்று ஸோபரும் அவரது குடும்பத்தினரும் நம்பிக்கையில் உள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top