புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சூரிய ஒளியின் மூலமாக இயங்கும் பேருந்து சேவையை தொடக்கி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது சீனா.சீனாவின் ஹெய்லான்ஜியாங் மாகாணத்தில், லாங்குவா நியூ எனர்ஜி ஆட்‌டோமொபைல் நிறுவனத்தினரால் சோலார்
சக்தியின் மூலம் இயங்கும் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து 100 பயணிகளை கொண்ட முதல் சேவையை, நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள நகரத்தில் தொடங்கி உள்ளது.

சோலார் சக்தியை பயன்படுத்துவதன் மூலம் லித்தியம் பேட்டரியின் ஆயுட்காலம் 35 சதவீதம் வரை அதிகரிப்பதாகவும், இந்த பேருந்து ஒரு கிலோமீட்டருக்கு 0.6 முதல் 0.7 கிலோவாட்ஸ் சக்தியை பயன்படுத்துவதாகவும் தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top