புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மருத்துவ துறை வளர்ச்சியின் காரணமாக மனிதனின் சராசரி வயது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறத. இந்நிலையில்  ஆரோக்யமான உடல்நலத்துடன் 150 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற்கான மாத்திரையை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது அடுத்த 5 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவூஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் யுனிவர்சிட்டி பேராசிரியர் பீட்டர் ஸ்மித் கூறுகையில் .

மனிதனுக்கு வயதாவதை ஒத்திப்போடும் மாத்திரையை கண்டுபிடிப்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 150 ஆண்டுகளைத் தாண்டி வாழ முடியும். அதாவது வயதாவதைத் தடுக்கும். இதுமட்டுமல்லாமல் நோய்நொடியின்றி ஆரோக்யமாக வாழவும் இந்த மாத்திரை உதவும். இந்த மாத்திரை உடலில் உள்ள செல்களை புதுப்பித்து உற்சாகமுடன் இருக்க வகை செய்யும் என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top