மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 73 வயது சந்தேகநபர் எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் முன்னாள் கிராம சேவகர் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை தோப்பூரை சேர்ந்த மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பத்தில் 13 வயது சிறுமியை களுவாஞ்சிகுடியில் உள்ள சிறுமியர் இல்லத்தில் இணைக்க பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சிறுமியை இணைக்க சில சான்றிதழ்கள் தேவையாகவுள்ளதால் குறித்த வயோதிபரின் வீட்டில் சிறுமியை பெற்றோர் விட்டுச்சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சிறுமி மீது அந்த முன்னாள் கிராம சேவகர் பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளார். இது தொடர்பில் சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்க இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் குறித்த முன்னாள் கிராம சேவகர் கைதுசெய்யப்பட்டு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 03 திகதிவரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

0 கருத்து:
கருத்துரையிடுக