புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாசா விண்வெளி மையம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே டைனோசர் குடும்பத்தை சேர்ந்த நோடோசரின் கால் தடங்களை ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
டைனோசர் குறித்த ஆய்வுகள் உலகம் முழுவதும் தொடர்ந்தபடியே உள்ளன.

இந்நிலையில் நாசாவின் கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் மையம் அருகே ஒரு நோடோசரின் கால் தடத்தை டைனோசர் ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இது 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கால் தடமாக கருதப்படுகிறது.

இதுகுறித்து ஆய்வாளர் ரே ஸ்டான்போர்ட் கூறுகையில், தனது எதிரியிடமிருந்து தப்பித்து ஓடும் போது இந்த கால் தடம் பதிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இது மிகவும் அரிய கண்டுபிடிப்பாகும்.

நோடோசரின் கால் தடங்கள் இதுவரை நமக்கு அதிகம் கிடைத்ததில்லை. எனவே இது முக்கிய கண்டுபிடிப்பாகும். பாசில் வடிவில் இந்த கால் தடம் கிடைத்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கனடாவில் சில கால் தடங்கள் கிடைத்துள்ளன. ஆனால் தற்போது கிடைத்துள்ளது ஒரு முழுமையான கால் தடமாகும். இந்த கால் தடம் நோடோசரின் இடது பின்னங்கால் தடமாகும் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வு முடிவை நாசா தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக தீவிர ஆய்வுக்கும் நாசா முடிவு செய்துள்ளது.





தாவரங்களை உண்ணும் விலங்கு வகைகளில் நோடோசர் என்பது ஜூராசிக் காலத்தின் பிந்தைய காலகட்டத்தைச் சேர்ந்ததாகும். இவை வட அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் அன்டார்டிகா ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வந்திருக்கின்றன


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top