புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் மிகவும் அவசியம். சிலரது முகம் பளபளப்பாய் டாலடிக்கும். ஆனால் கழுத்து கருப்பாக‌ இருக்கும். கழுத்தின் கருமையைப் போக்க வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே பயன் பெறலாம்..

தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக கழுத்தின் கருமை பகுதிகளில் எலுமிச்சை சாற்றினை தடவி ஊறவைத்து பின்னர் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கழுத்தின் கருமை படிப்படியாக மறைவதை காணலாம்.

ஒரு டீஸ்பூன் பால் பவுடர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை டீ ஸ்பூன் பாதம் எண்ணெய் கலந்து பசை போல கலந்து முகம், கழுத்து பகுதிகளில் அப்ளை செய்யவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடவும். வாரம் ஒருமுறை இதுபோல் செய்து வந்தால் முகமும், கழுத்தும் பளிச்சென மாறும்.

உருளைக்கிழங்களை தோல் நீக்கி சீவி அதை கழுத்துக் கருமை உள்ள பகுதிகளில் 5 நிமிடம் தேய்க்கவும். பின்னர் அரை மணிநேரம் கழித்து குளிக்க கருமை படிப்படியாய் மறையும்.

அதேபோல் தக்காளியை நன்றாக மசித்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதிகளில் அப்ளை செய்யவும். எளிமையான இந்த முறைகளை தினமும் செய்து வந்தால் சில வாரங்களில் கழுத்துக் கருமை படிப்படியாக சரியாகும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top