புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



 வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ர மகாவித்தியாலயத்தில் நான்கு வகுப்பறைகளைக் கொண்ட தற்காலிக கொட்டில் தீயில் எரிந்துள்ளது.
நேற்று  வியாழன் பிற்பகல் 2.30 மணியளவில் இந்த பாடசாலைக்கு அருகாமையில் இருந்தவர்கள் தமது காணியை துப்பரவு செய்து குப்பைகளை எரித்துள்ளனர.

அதிகமாக காற்று காரணமாக தீப் பொறி பாடசாலை வளாகத்திற்குள் இருந்த தற்காலிக கொட்டிலில் வீழ்ந்து முற்றுமுழுதாக தீக்கிரையாகியுள்ளது.

வகுப்பறைகளில் இருந்த கரும்பலலை, வெண்பலகை மற்றும் பாடசாலை தளபாடங்களும் தீக்கிரையாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராமவாசிகள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top