புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து;அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம் மிகுந்தவர்களாகவும்
மாயசக்தி, மனோவசியம், கற்பனை வளம், கதை, கட்டுரை படைக்கும் ஆற்றல மிக்கவர்களாகவும் இருப்பர். பிறரின் பாராட்டுதலும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

மனதை ஒருமுகப்படுத்துவது என்பது இயலாத காரியம் என்று நினைத்து, அந்த நினைப்பையே ஒருமுகப்படுத்திவிடுவர். இவர்களின் பயந்த சுபாவமே இவர்களுக்கு பலமாகும். பல இடங்களில், “முகத்தைப் பார்த்தாலே பாவமாக உள்ளது. அவருக்கு என்ன வேண்டும் கேள்” எனப் பல பிரபலங்கள், இவர்களின் வேலையை உடனே முடித்துத் தந்துவிடுவர். இவர்கள் எவரையும் நம்புவதில்லை. தன்னுள் உள்ள ஆற்றலை அடிக்கடி மறந்துவிடுவர். ஒன்று மற்றும் எட்டாம் எண்ணினர் மட்டும்தான் இவர்களை வலுவேற்றக்கூடியவர்கள். ஏழாம் எண்ணினரைத் தேர்ந்தெடுத்தல் நலமாகும்.

எந்தச் செயலையும் மிகைப்படுத்திப் பேசுவது இவர்களால் மட்டும்தான் முடியும். பிறருக்குப் போதிப்பதில் புத்தனாவர். அடுத்தவர் ஆலோசனையை இவர்கள் விரும்புவது இல்லை. உடல் உழைப்பை விரும்பாத இவர்களுக்குக் கிடைக்கும் பணிகளும் எளிதாக அமைந்துவிடும். வரவேற்பாளர், ஆசிரியர், திரைப்படக்கதை எழுத்தாளர், ஆன்மீகப் போதனையாளர் போன்ற பணிகளில் இருப்பர்.

ஞானத்தையும் கல்வியையும் அண்டங்களைப் பற்றியும் பேசுவர். பலமுறை யோசித்தாலும் செயற்பட வேண்டிய நேரத்தில் பின்வாங்கிவிடுவது இவர்களின் மனோபாவம். இவர்களின் சாந்தமான முகம் பெண்களுக்கு மிகப் பிடிக்கும். இவர்களாகக் காதலிக்க மாட்டார்கள். ஆனால், இவர்களைக் காதலிக்க பெண்கள் கூட்டமே வரும். காரணம், இவர்களின் அப்பாவியான முகத்தோற்றம்தான். ஏதேனும் ஒரு கலையில் ஆர்வமுள்ள இவர்கள், உடையணிவதில் மிகுந்த கவனம் செலுத்தவர். சூழ்நிலைக்கேற்றவாறு தன் செ யற்பாட்டை மாற்றிக்கொள்வதில் வல்லவர். சதாரண விடயங்களைப் பூதாகரப்படுத்துவதில் சூரர். குடும்பத்திற்குள்ளும் எதையாவது இப்படிக் குழப்பிக்கொள்வர். தோல்விகளைக் கண்டு துவண்டுபோவர். இருப்பினும் தோல்விகள் ஏற்படாவண்ணம் செ யல்களை வடிவமைக்க ஒன்றாம் ஏழாம் எண்ணினரை அருகில் வைத்துக்கொள்வது நலம்.

அம்மனின் அனுக்கிரகம் பெற்ற இவர்களுக்குப் பெண்களால் பேருதவி கிடைக்கும். பிறரின் உள்மனதை அறிந்து, அதற்கேற்ப செ யற்படுவது இவர்களின் தனிச்சிறப்பாகும். தெய்வீகம், ஞானம், தத்துவம் என்பனவற்றில் அதிக ஈடுபாடு உண்டு. வயிற்று உபாதை, நீர்சம்பந்தமான வியாதிகள் இவர்களுக்கு அடிக்கடி தோன்றும். இவற்றைப் போக்குவதற்கு உணவுக் கட்டுப்பாடு அவசியம். வானம் கருத்தால் போதும். ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும். சித்தா, ஹோமியோ மருத்துவம் இவர்களுக்கு அருமருந்தாகும்.

எழுதுகருவிகள், விவசாயம், பெண்களைக் கவரும் தொழில், தண்ணீர் சம்பந்தமானவை, கடல்வழி வியாபாரம், நகைக்கடை, ஜவுளி, நறுமணப் பொருள், பல்பொருள் அங்காடி, மருந்துக் கடை, திரைப்படம், சோதிடம், சாஸ்திரம், எண்சாத்திரம் போன்றவை இவர்களுக்கு ஒப்பான தொழில்களாகும்.

வம்புச் சண்டைக்குப் போகாத இவர்கள், வந்த சண்டையையும் விட்டுவிடுவர். வசீகரத் தோற்றமுடைய இவர்கள், பெண்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எந்தப் பழக்கத்திற்கும் அடிமையாவதைத் தவிர்க்கவேண்டும். இந்த மனித நேயப் பிரியர்கள், சோம்பலை எதிர்த்து, சுறுசுறுப்பை வரவழைத்து, தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால் நி ச்சயம் வாழ்வில் உயர்வு உண்டு.

முதல் எழுத்தாக ‘K’யைப் பெற்றவர்கள்
கிருபானந்த வாரியார்
கண்ணதாசன்
காமராஜர்
கருணாநிதி
கமலஹாசன்


“L” இல் பெயர் துவங்கினால் `லக்கி’தான்

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நீதி, நேர்மை, நியாயம் கொண்ட இவ்வெழுத்தில் சூரியக்கதிர்கள் பாய்ந்து பெயர் முழுக்கப் பரவுவதால் பரபரப்பும், சுறுசுறுப்பும், புத்திகூர்மையும், மனதில் பட்டதை தயங்காமல் கூறும் குணாதிசயமும் இவர்களை என்றும் அரங்கத்தில் முந்தியிருக்கச் செய்யும்.

கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பது இவர்களுக்குத்தான் பொருந்தும்.  உண்மைக்குப் பெயர் போன இவர் களால் உலகிற்கே பெருமை கிட்டும். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதவர்கள் இவர்கள். இதனால் பலருடைய வருத்தத்தைச் சம்பளமாகப் பெறும் சங்கடங்களுக்கு உட்படுவர். இறைவன் மேல் கடும் பற்று உள்ள இவர்களுக்கு, மத நம்பிக்கையும் அதிகம். ஆனால் மூட நம்பிக்கைகளை அதிகம் வளர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

`புராணங்களையும், இதிகாசங்களையும், உபநிஷத்துக்களையும், சாஸ்திரங்களையும் மனிதர்கள்தானே இயற்றினர்! அதுபோல எனது கருத்துகளும் வருங்காலத்தில் சரித்திரத்தில் இடம்பெறும்’ என இவர்கள் ஆணித்தரமாக அடித்துக் கூறுவர். நாட்டுப்பற்று மிகுந்த இவர்கள் நல்ல உழைப்பாளியாகவும், நாணயம் மிகுந்தவராகவும், அடுத்தவர் சொல்லை மதிப்பவராகவும் இருப்பர்.

`திருட்டை ஒழிப்பது எப்படி’ எனக் காவல் துறையினரும், சட்ட வல்லுநர்களும்கூட இவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இவர்களது போதனைகளைக் கேட்பதற்கென்றே ஒரு கூட்டமுண்டு. இவர்களைக் கொண்டு பொதுக் காரியங்களை எளிதில் மக்களிடம் எடுத்துச் செல்லலாம். அந்தளவிற்கு மக்கள் இவர்களை நம்புவர்.

ஆச்சார, அனுஷ்டானங்களைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பார்கள். பல உயர்பதவிகள் இவர்களை நாடி வந்து கொண்டேயிருக்கும். `நாம் இவரைப் போன்று வசதியாக இல்லையே, இந்தப் பதவி கிடைக்காமல் போய்விட்டதே’ எனப் பிறரைப் பார்த்துப் பேராசை கொள்ளமாட்டார்கள்.

ஆசிரியர்களைக் கடவுளாக மதிக்கும் இவர்கள் சுயகௌரவத்தை அதிகம் விரும்புவர். தன் யோசனைப்படிதான் காரியங்கள் நடக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பர். இதனால் நட்புக் கூட்டம் நகர்ந்துபோக வாய்ப்பு உண்டு.  பேச்சாற்றலால் உலகையே வளைக்கும் திறமை உண்டு. அதர்மத்தின் எதிரியான இவர், அசாத்திய துணிச்சல் மிக்கவர்.  கல்வி, கேள்விகளில் தேர்ந்தவர். எதிலும் தனக்கென்று ஒரு பாணியை வைத்துக்கொண்டு தனித்து நிற்பர். தர்ம காரியங் களில் எப்பொழுதும் தன் மனதை ஈடுபடுத்திக்கொள்வர். ஞாபகசக்தி அதிகம் கொண்ட இவர்கள், சிறந்த நடிகர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், போதனை செய்பவராகவும் திகழ்வர்.  நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை அலங்கரித்து ஆலோசனை வழங்குவர்.

கருணையும், நீதியும் இயற்கையாகவே கலந்து பெற்ற இவர்கள், கணக்கில் சூரர்களாக இருப்பர். அடிக்கடி வெளியூர்ப் பயணங்களை இவர்களால் தவிர்க்க இயலாது. எவ்விடத்திலிருந்தாலும் செல்வாக்குடன் திகழ்வர்.  பிறர் கஷ்டங்களை அறிந்து உதவுவர். இவர்களின் நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டு, பலர் இவர்களைப் பின்பற்றுவதில் பெருமை கொள்வர்.  யூகத்தின் அடிப்படையில் பொருளீட்டுவதில் வல்லவர். கல்வி நிறுவனம், ஆன்மீகப் பொருள் விற்பனை, திரைப்படத் துறை, மருத்துவத் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டால் செல்வம் கொழிக்கும்.

நினைத்ததைச் சாதிக்கும் இவர்களுக்கு அலர்ஜி ஏற்படலாம்.  மூளை மட்டும்தான் இவர்களுக்கு முதலீடு. யாரும் எளிதில் மடக்க இயலாத ராஜதந்திரம் படைத்த இவர்கள், 6ஆம் எண்ணினரிடமும் யு, வி, டபிள்யூ என்ற முன்னெழுத் தைப் பெயரில் கொண்டவர்களிடமும் மிகக் கவனமாக நடந்துகொள்வது நல்லது.

9, 1ஆம் எண்ணினரும், சி, ஜி, எல், எஸ் மற்றும் ஏ, ஐ, ஜே, கியூ ஆகியவற்றை முதல் எழுத்தாகப் பெற்றவர்களிடமும் தாராளமாக நட்புக் கொள்ளலாம். முன்னேற்றத்திற்கு மிக உதவிகரமாக இருப்பர். தியாக சீலர்களான இவர்களுக்கு மறுபிறவி இல்லை. உண்மையை, உண்மையாகக் கடைப்பிடித்தால் எதிலும் வெற்றிதான் `எல்’ எழுத்தைக் கொண்ட `லக்கி’ மனிதர்களுக்கு!

முதல் எழுத்தாக “L” ஐப் பெற்ற பிரபலங்கள்
லால்பகதூர் சாஸ்திரி
லெனின்
லாலா லஜபதிராய்
லியோ டால்ஸ்டாய்
லட்சுமி காந்த் பியாரிலால் (இந்தி இசைமைப்பாளர்)
லட்சுமி (நடிகை)


‘M’ என்ற எழுத்தில் பெயர் துவங்குகிறதா?

வேதங்களை விலாவாரியாக அலசுவது, விவாதம் செய்வது, வீரமான மனது இவற்றை இயல்பாகவே பெற்றவர்கள் `M’ என்ற எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டவர்கள். ஆனால் குற்றம் கண்டுபிடிப்பது இவர்களின் பலவீனமே. யாரும் செய்ய முடியாத காரியங்களைச் செய்வது இவர்களின் விசேடத்தன்மையாகும். தாங்கள் நினைக்கும் கருத்துகளைப் பிறரிடம் கட்டாயப்படுத்தித் திணிப்பர். கயமைத்தனத்தை எதிர்ப்பது, பொதுக் காரியங்களில் ஈடுபடுவது இவர்களின் சிறப்பாகும்.

இவர்களுக்கு வாய்தான் எதிரி. ஆனாலும் அழகான உச்சரிப்பினால் மக்களைக் கவர்வர். நாடு நன்றாக இருக்க வேண்டும், யாருக்கும் எந்தத் தீங்கும் நடக்கக்கூடாது என்பதில் அக்கறையாக இருப்பர். “அரசாங்கத்தின் பல திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில்லை. எனவே, அந்தத் திட்டத்திற்குப் பதில் வேறு திட்டங்களை அறிவிக்க வேண்டும்” எனப் பேசுவதுடன், அதற்காகப் போராடவும் செய்வர். தன் சுதந்திரத்தில் யாரும் தலையிட விரும்பாத இவர்கள் பிறரது சுதந்திரத்திற்காகவும் போராடுவர்.

உலகில் உள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் இவர்களிடம் தெரிந்து கொள்ளலாம். சுற்றுப்பயணம் செல்வதில் மன்னர்கள். இயற்கைக் காட்சியை ரசித்து இன்புறுவர். மசால் பொருட்களை உண்பதில் பிரியம் காட்டுவர். தன் எண்ணங்களைக் கோர்வையாக்கி, அடுத்தவர்களை அசரச் செய்வர். சோதிடம், சாஸ்திரம், வானியல், விஞ்ஞானம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். எதற்கும் அஞ்சமாட்டார்கள். தோல்வி என்பது வாழ்வின் ஒரு அத்தியாயம் என்பர்.

அரசியல் தந்திரம் வாய்ந்த இவர்கள், பிறருக்குப் புரியாத புதிராக இருப்பர். எது பற்றியும் கவலை கொள்ளாத இவர்கள், வெட்டவெளிச்சமாகத் தன் கருத்துகளை வெளியிட்டு அதிர்ச்சியடையச் செய்வர். மென்மையான செயற்பாடுகளை எதிர்ப்பார்கள். தீர்க்கமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் இவர்கள், பிறர் கருத்துகளைத் துச்சமாக மதிப்பதை நிறுத்தினால், மேலும் பிரகாசம் அடையலாம். அனைவரிடமும் கலகலப்பாகப் பழகும் இவர்களுக்கு, 1, 10, 19, 28 திகதிகளில் பிறந்தவர்கள் அதிக நன்மை செய்வர். மற்றவர்கள் இவர்கள் பேச்சை ஜீரணிக்க முடியாமல் விலகிவிடுவர்.

கருத்துக் கருவூலமான இவர்களுக்கு ஆன்மீகத்தில் நல்ல நம்பிக்கை உண்டு. கடுமையான செலவாளியாக இருப்பர். வாசனைத் திரவியங்கள், உயர்ந்த ஆடைகள் போன்றவற்றை விரும்புவர்.

அடிக்கடி மூட்டு வலி, வயிறு சம்பந்தமான நோய்கள், கண்நோய் போன்றவற்றால் அவதி ஏற்படலாம். எந்தச் செயலிலும் லட்சியத்துடன் செயற்படும் வல்லமை வாய்ந்தவர்கள். அரசியல், திரைப்படம், புத்தகம் வெளியிடுதல், இரும்பு, வாகனத் தொழில், இரசாயனம், வழக்கறிஞர், மருத்துவர், கடல் கடந்த வியாபாரம், கட்டடம், கலைப்பொருள் விற்பனை போன்ற தொழில்கள் இவர்களுக்கு வெற்றியளிக்கும்.

சமூக விரோத சக்திகளை சந்தர்ப்பம் அறிந்து தட்டிக் கேட்பது நலம். இல்லையேல் வீண் பிரச்சினைக்கு உட்பட நேரிடும். எந்தத் தொழிலையும் தெரிந்துகொள்வது நல்லதுதான். ஆனால், ஒரு தொழிலை உறுதியாகப் பற்றுவதால் பொருளாதார ஏற்றம் காணலாம். சமுதாயக் காவலரான இவர்கள், மிகப் பெரிய காரியங்களைக் கூட மிக எளிதில் செய்ய வல்லவர்கள். மாந்திரிகம், பொருள் வரவழைத்தல், ரகசியங்களைத் தெரிந்துகொள்வது இவர்களின் பொழுதுபோக்கு. எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் நொடிகளில் பதில் அளிக்கும் இவர்கள், ஒரு தகவல் களஞ்சியம்தான்.

`M’ எழுத்தை முதல் எழுத்தாக பெற்ற பிரபலங்கள்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
மொரார்ஜி தேசாய்
முத்துராமலிங்கத் தேவர்
முலாயம்சிங் யாதவ்
மைக்கேல் ஜெக்ஸன்


யாராலும் அடக்க முடியாத `N’ எழுத்துக்காரர்கள்!

எந்த ஜீவனாக இருந்தாலும் ஐம்பெரும் பூதங்களின் ஆதரவு இருந்தால்தான் வாழ முடியும். அதுபோலவே, N என்ற எழுத்தில் சூரியக் கதிர்கள் பட்டு அதற்குள்ளேயே இருப்பதால், சகலமும் அறிந்த இந்த பிரஹஸ்பதிகளை எவராலும் எளிதில் அடக்க முடியாது. பிறர் செய்து முடிக்க முடியாத காரியங்களை லாவகமாக முடிப்பர் இந்தக் கில்லாடிகள். அனைவரையும் தன் செயல், பேச்சால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது இவர்களது சிறப்பு. தூக்கம் என்பது பிடிக்காத காரியம். தூங்குமூஞ்சிகளை மனிதர்களாகவே மதிப்பதில்லை.

நடை, உடை, பாவனைகளாலும் இவர்கள் பிறரை அசத்துவர். ஆலோசனை வழங்குவதில் கெட்டிக்காரர்கள். பிரபலங்கள் தன் ஆஸ்தான ஆலோசகர்களாக இவர்களை வைத்துக்கொள்வதுண்டு. பிறரின் கருத்துகளை உடனடியாக உட்கிரகித்துக்கொள்வதில் வல்லவர். சினிமா, நாடகங்களில் நீண்ட வசனங்கள் கொடுத்தாலும் நொடியில் பேசிவிடுவர். எதையும் பரபரப்பாகச் செய்வதில் விருப்பம் கொள்வர். இவர்களில் பலர் 9ஆம் வகுப்பு படிக்காமலேயே 12ஆம் வகுப்பு படித்துத் தேறிவிடுவர். அவ்வளவு ஆற்றல் மிகுந்தவர்கள்.

பழைமை வாதத்தை எதிர்ப்பர். எந்தச் செயலிலும் சிறிதும் தயக்கமின்றி தானியங்கிபோல் தனியராய்ச் செயற்படுவர். மனதில் பட்டதை அப்படியே கூறி, ஆபத்தில் மாட்டிக்கொள்வதும் உண்டு. மனிதகுலம் நன்றாக இருக்கப் பாடுபட்டுக் கொண்டே இருப்பர். தூரதேசப் பயணங்களில் விருப்பமுடையவர். பொதுக் காரியங்களில் தானாகவே முன்வந்து செயல் புரிந்து நற்பெயர் எடுப்பர். சிலர் சூதாட்டம், மோட்டார் கார்ப் பந்தயம், அதிர்ஷ்டலாபச் சீட்டு என்பவற்றை நம்பி ஏமாறுவதும் உண்டு.

நல்ல மனதுடைய இவர்களுக்கு ஒரே எதிரி பிறரிடம் முரண்பாடான கருத்துகளை அள்ளிக் கொட்டுவதுதான். இரவு, பகல் பாராது எப்பொழுது எழுப்பினாலும் துள்ளிக் குதித்து ஓடிவருவர். சமுதாய மாற்றங்கள் நிகழவேண்டும், அரைத்த மாவையே அரைக்கக் கூடாது, உயிர்களின் நலனுக்காக சட்டதிட்டங்களை மாற்ற வேண்டும் எனத் தைரியமாகப் பொது இடங்களில் கூறுவர்.

இவர்களின் பலவீனம் எதுவென்றால், எந்தப் பழக்கத்திற்கு இளவயதில் ஆட்படுகிறார்களோ, அதைக் கடைசிவரை விடமாட்டார்கள். எனவே, சிறு வயது முதல் நல்லவர்களுடன் பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. புதுப்புது நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வர். காதலிலும் அப்படித்தான் என்கிறது பெயரியல். பிறர் தவறுகளை மன்னிக்கும் மனப்பாங்கு இவர்களின் நல்ல குணாதிசயம். நாளொரு திட்டத்தை அறிவித்து அசத்துவர். அறையை வாஸ்துப்படி மாற்றுவர். நிறுவன பெயர்ப்பலகையின் நிறத்தை மாற்றுவர். கேட்டால், எதில் வேண்டுமானாலும் நல்ல மாற்றங்கள் நிகழும் என்பர். திருமணத்திற்கு முன் பெரியவர்களைக் கேட்டு முடிவெடுப்பது நலம். வஞ்சப் புகழ்ச்சியை உண்மை யெனக் கருதி, எதிரிகளுக்குப் பலவிதங்களில் நன்மை புரிந்து அவர்கள் வாயை அடைத்து இனிய நண்பர்களாக்குவது இவர்களின் சிறப்பாகும். முடியாது எனக் கருதப்படும் வேலைகளை இவர்களிடம் ஒப்படைத்தால், தங்கள் அணுகுமுறையால் வெற்றிகாண்பது நமக்கு பிரமிப்பாக இருக்கும். உடல் உழைப்பு குறைவாகவே இருக்கும். புத்தி கூர்மையால் எளிதான வழியில் பணம் பண்ணுவதில் சமர்த்தர்.

கண்கள் காந்தம்போல் இருக்கும். அரசியல், திரைப்படம், தரகுத் தொழில், சோதிடம், இசை போன்ற துறைகள் வெற்றிதரும். நரம்பு சம்பந்தமான நோய்கள், வாயுக்கோளாறு, உடல்வலி அடிக்கடி ஏற்படும். கணனி போன்ற திறமையான மூளையுள்ள இவர்கள் `கழுவுற மீனில் நழுவுற மீன்’ போன்ற குணம் உடையவர்கள்!

`N’ எழுத்தை முதல் எழுத்தாக பெற்ற பிரபலங்கள்
நந்தனார்
நேதாஜி
நெல்சன் மண்டேலா
எம். என். நம்பியார்
நாகேஷ்

`O’ என்ற எழுத்தில் பெயர் துவங்குகிறதா?

நாம் அனுபவிக்கும் அனைத்துப் பொருட்களும் இந்த பூமியிலிருந்து தான் விளைகின்றன. சூரியக்குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் உருண்டையாகத்தான் உள்ளன. வேற்றுக் கிரகத்திலிருந்து எந்தப் பொருட்கள் வந்தாலும் அடுத்த கிரகம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. இது இயற்கை நியதி. தானுண்டு, தன் வேலை உண்டு, யாரையும் எந்தத் தொந்தரவும் செய்வதில்லை, பிறர் தொந்தரவையும் ஏற்பதில்லை என்றிருக்கும் `O’ என்ற எழுத்தில் சூரியக்கதிர்கள் முற்றிலுமாக உட்புக முடியாமல் இருப்பதால் இவ்வெழுத்தில் உள்ளவர்கள் ஏனைய அனைவரிடமிருந்தும் முற்றிலுமாக மாறுபாடான குணாதிசயத்தைப் பெற்றவர்களாக இருப்பர்.

ஆன்மீகத் தென்றலான இவர்கள் மாபெரும் ஆராய்ச்சியாளர்கள். மந்திரம், தந்திரம், சூட்சும சக்தி, மனவசியம் போன்றவற்றில் அதிக ஈடுபாடுடையவர்கள். சாஸ்திர, சம்பிரதாயங்களில் மனம் ஓடிக்கொண்டே இருக்கும். நீதியை நிலைநாட்டுவதில் முனைப்பாக இருப்பர். இவ்வுலகத்தில் நடக்கும் அதர்மங்களை நினைத்துக் கண்ணீர் விடுவர். கானகங்களில் குடியிருக்க விரும்புவர். இருப்பினும் சோம, சுராபானங்களில் மூழ்கிவிடுவர் (போதை வஸ்துக்கள்). 50 வயதிற்கு மேல் உலக விடயங்கள் பொய்யானவை, எதுவும் நிலையற்றது என்று புலம்புவர். ஞான வழியைப் பின்பற்றுவர். சென்ற பிறவியில் என்ன நடந்தது, அடுத்து என்ன நடக்கும் என்ற விடயங்களை இவர்கள் மனம் அடிக்கடி அறிவித்துக்கொண்டேயிருக்கும். மனிதர்கள் மனத்திற்கு மாறுபட்ட விடயங்களை அலசுவதும், மாற்று கிரகங்கள் எப்படி இருக்கும், அதில் மனிதர்கள் வாழ்கிறார்களா என்பது பற்றியும் அனுதினமும் பேசுவர். ஆடைகள் அணிவதில் அன்னம் போன்று பிரகாசிப்பர். கண்களில் தெய்வீகம் தெரியும். மத விடயங்களில் மாபெரும் ஈடுபாடு உண்டு.

உயிர்ப்பலி வேண்டாமென்பர். கடல் கடந்து சென்று ஊதியம் பெறும் வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலும் அமைதியுடன் காணப்படும் இவர்கள், தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்பிவிடும் குணமும் கொண்டவர்கள். கேட்டால் தத்துவம் என்பர். புலன் அடக்கம் இவர்களுக்கு அதிகம் உண்டு என்றாலும், காதல் தோல்விகளின் கதாநாயகர்களும் இவர்களே. கலைத்துறையில் மிகுந்த நாட்டமுடையவர்கள். இவர்கள் பேச்சில் மயங்கும் மனிதர்கள் ஒரு கூட்டமாக தினசரி கூடுவர். இவர்களின் கருத்தை கேட்டவண்ணமிருப்பர். கற்பனைக் கடலான இவர்கள் வாழ்வே மாயம் என்பர். மக்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணிக்கும் இவர்கள் உலகப் புகழ் பெறும் வாய்ப்புகள் உண்டு. எதைச் சொன்னாலும் மக்கள் கேட்டுக்கொள்வர் என்பதால், தேவையற்ற (உலகிற்கு) கருத்துகளைக் கூறுவதை விட்டு விடுவது அனைவருக்கும் நலம். இவர்களின் பல கருத்துகள் தண்ணீரில் எழுத்துப் போன்றவையே.

இவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் சக்தி குறைவாக இருக்கும். இதைத் தவிர்க்க தூய்மையான இடங்களில் வசிப்பதும், உணவு அருந்துவதும் மிக முக்கியம். பயணக் கட்டுரை எழுதுவதில் வல்லவர். பொருள் வரவு – பல தடைகளைக் கடந்து வரும். வர ஆரம்பித்தால் அவ்வளவுதான். யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. மனோ தைரியம் அவசியம் வேண்டும். வாழ்வில் மாபெரும் நன்மைகளை இவர்களுக்கு மனமுவந்து செய்பவர்கள் R,K,B என்ற எழுத்துகளில் ஒன்றைப் பெயரின் முதல் எழுத்தாக உடையவர்களே ஆவர்.

இவர்களுக்கு சினிமா, கவிதை, புத்தகம் எழுதுவதாலும், விவசாயம், பால் பண்ணை, காகித ஆலை, இலத்திரனியல், வானசாஸ்திரம் போன்றவையும் பெரும் பொருள் தரும். நட்புக்கு விசுவாசமாக இருப்பார்கள். பிறர் கூறிக்கொள்ளும் அளவிற்கு முன்னோடியாக வாழ்ந்து காட்டுவர். அடுத்தவர் கருத்தை அன்புடன் கேட்பர். தனக்கு ஒத்துவராத காரியங்களில் இறங்கமாட்டார்கள். திடீர் அதிர்ஷ்டத்தில் அறவே நம்பிக்கை இல்லாதவர். அடிக்கடி வாகனங்களை மாற்றிக் கொள்வர். தலைவலி, தோல்நோய், மூட்டுவலி, வயிறு சம்பந்தமானவற்றை ஒடுக்கி மனச்சோர்வை விட்டு, உணவுக் கட்டுப்பாட்டிற்கு வந்தால் போதும்.

மதப்பற்று அதிகம் உள்ள இவர்கள் மாற்று மதத்தினரையும் மனிதர்களாகக் கருதுவது மாபெரும் மாண்பாகும். குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, குதூகலமாக வையத்துள் வாழ்வாங்கு வாழ இறை நம்பிக்கை கைகொடுக்கும். `O’ வில் பெயர் அமைந்தோர் கூறும் கருத்துக்கள் நன்மையளிக்கும்.

`O’ வில் பெயர் அமைந்த பிரபலங்கள்
ஓஷோ (ஞானி)
ஓஸ்கார் ஒயில்ட் (அறிவாளி)
ஓமர்கயாம் (கவிஞர்)
ஓனாசிஸ்
ஒபராய்
ஒபாமா

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top