புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

15வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபரொருவருக்கு நீர்கொழும்பு மேலதிக நீதவான் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

நீர்கொழும்பு !மாநகர சபையில் பணியாற்றும அக்கரைபற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவராவார்.

பொதுச்சுகாதாரப் பிரிவினரால் பிட்டிபனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சுகாதாரம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று அண்மையில் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சந்தேக நபரும் சென்றுள்ளார். இதன் போது சந்தேக நபருடன் குறித்த மாணவிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தொலைபேசி மூலம் தொடர்பு வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு மாணவிக்கு அழைப்பை எடுத்த சந்தேக நபர் மாணவியை வீட்டுக்கு வெளியே அழைத்து உரையாடியுள்ளதுடன் தனது செல்லிடத் தொலைபேசியிலிருந்த ஆபாச வீடியோ காட்சிகளை காண்பித்து மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனை கண்ட அயலவர் ஒருவர் இது தொடர்பாக மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து சந்தேக நபர் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை பொலிஸார் நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top