தலவாக்கலை - பூண்டுலோயா - பேலனட்ஸ் ஹெரோ தோட்ட மேற்பிரிவில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று (22) இரவு 11 - 12 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த தோட்டத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, மகன் மூவரும் வசித்து வந்துள்ளனர்.
தந்தை கொழும்பில் வேலை செய்யும் நிலையில் தாயும் மகனும் வீட்டில் இருந்துள்ளனர்.
சம்பவ தினமான நேற்று (22) இரவு குறித்த தாய் அயல் வீட்டு நபருடம் வீட்டில் தகாத உறவு கொண்டுள்ளார். இதனை மகன் நேரில் கண்டுள்ளார்.
இதன்போது ஆத்திரமடைந்த அவர் குறித்த அயல்வீட்டு நபரை கத்தியால் வெட்டி கொலை செய்ததுடன் தாயை கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.
பின்னர் முச்சக்கரவண்டி ஒன்றில் தாயை ஏற்றிக் கொண்டு கம்பளை பகுதிக்குத் தப்பிச் சென்றுள்ளார். அங்கு சென்று தாயை கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
முத்துசாமி என்ற நபரே கொலை செய்யப்பட்டவராவார்.
சடலம் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பூண்டுலோயா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக