புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மனைவியின் கொடுமையை தாங்க முடியாமல் கணவர் சிறைக்கு செல்ல முயன்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தைவான் நாட்டை சேர்ந்தவர் பய்(வயது 36). இவரது மனைவி தினமும் இவரை திட்டிக் கொண்டே இருந்ததால், மனம் வெறுத்து போன பய் சிறைக்கு சென்று நிம்மதியாக இருக்க திட்டமிட்டார்.


இதற்காக வீட்டருகே உள்ள பல சரக்கு கடைக்கு சென்று, நான் கொள்ளையடிக்க போகிறேன், பொலிசுக்கு தகவல் கொடுங்கள் என கூறினார்.

சொன்னபடி அங்குள்ள சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்து கொண்டு, கடைக்கு வெளியே வந்து பொலிசுக்காக காத்திருந்தார்.

பொலிசார் வந்து பய்யை கைது செய்து விசாரித்ததில், உண்மையில் இவருக்கு கொள்ளையடிக்கும் நோக்கமில்லை.

மனைவியின் தொந்தரவை பொறுக்க முடியாமல் தான் இந்த வேலையை செய்துள்ளார் என்பதை தெரிந்து கொண்டு வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் விடுவித்து விட்டன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top