புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தின் டிராய்ட்விச் பகுதியில் ஒரு பூங்காவில் குடிபோதையில் மிதந்த 14 வயது சிறுமியுடன் உறவு கொண்டதாக 15 முதல் 18 வயது வரையிலான 4 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.


நான்குபேர் மீதும் கற்பழிப்பு புகார் சுமத்தப்பட்டு  கோர்ட்டில் ஆஜர் செய்யபட்டனர். இருப்பினும், இவர்கள் நால்வரும் தாங்கள் அந்த சிறுமியின் விருப்பத்துடன்தான் செக்ஸ் உறவு கொண்டோம் என்று கூறியதால் கற்பழிப்புப் புகாரை கோர்ட் தள்ளுபடி செய்தது.

இவர்கள் சிறுமியுடன் உறவு கொண்டபோது அதை மொபைல் போன் வீடியோவிலும் பதிவு செய்துள்ளனர்.

சிறுமியிடம் நடந்த விசாரணையின்போது, தான் செக்ஸ் ரீதியான தொடர்புகளை மட்டுமே அனுமதித்ததாகவும், உடல் உறவை தான் அனுமதிக்கவில்லை என்றும் கூறினார்.

இருப்பினும் சிறுமி, செக்ஸ் ரீதியான நடவடிக்கைக்கு சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்தே இந்த நான்கு பேரும் உறவில் ஈடுபட்டதால் இதை கற்பழிப்பாக கருத முடியாது என்று கோர்ட் கூறி விட்டது.

கோர்ட் விசாரணையின்போது அரசுத் தரப்பு வக்கீல் James Dunstan வாதிடுகையில், அந்த சிறுமி அரை லிட்டர் வோட்கா அருந்தியிருந்தார். பார்க்கில் வைத்து அந்த நான்கு பேரையும் சந்தித்தார். அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தன்னை முத்தமிட அவர் அனுமதித்தார். ஆனால் நான்கு பேரும் எல்லை மீறி உறவு வரை போய் விட்டனர். மது போதையில் இருந்ததால் அந்த சிறுமியால், நால்வரையும் தடுக்க முடியவில்லை என்று வாதிட்டார்.

தற்போது கைதான அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top