தாலி கட்டி கணவன் மனைவியாக 2 நாள் வாழ்ந்த காதல் ஜோடி தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் வால்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த தோணிமுடி 3வது பிரிவை சேர்ந்த தர்மஜெயம் மகள் பரண்யாதேவி(18). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பேஷன் டெக்னாலஜி முதலாண்டு படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக கடந்த 9ம் தேதி வால்பாறையில் உள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார்.
மீண்டும் சனி, ஞாயிறு விடுமுறைக்கு வருவதாக கூறி, தீபாவளிக்கு மறுநாள் காலை கல்லூரிக்கு சென்றார். ஆனால், வரவில்லை. கல்லூரியில் விசாரித்தபோது வீட்டிற்கு சென்றதாக கூறினர். அதே பகுதியை சேர்ந்த ஜோதிவேல் மகன் சக்திவேல்(18).
இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து வந்தார். இவரும் தீபாவளிக்காக வீட்டிற்கு வந்திருந்தார்.
பிறகு வேலைக்கு செல்வதாக கூறி திருப்பூர் புறப்பட்டார். சக்திவேலின் வீட்டிற்கு அருகில் அவரது பாட்டி வீடு உள்ளது.
பாட்டி வெளியூருக்கு சென்றதால் வீடு பூட்டியிருந்தது. பூட்டிய நிலையில் உள்ள வீட்டில் இருந்து நேற்று மாலை டிவி சத்தம் கேட்டதை அக்கம்பக்கத்தினர் கேட்டனர். பூட்டை உடைத்து உள்ளே பார்த்தபோது உள்ளே பரண்யாதேவி, சக்திவேல் ஆகியோர் தனித்தனியாக தூக்கில் தொங்கி இறந்திருந்தனர். பெண்ணின் கழுத்தில் புதுத்தாலி இருந்தது. சுடிதார் அணிந்திருந்தார்.
சேலையை இரண்டாக கிழித்து தனித்தனியாக தூக்கில் தொங்கியுள்ளனர். இருவரும் ஏற்கனவே காதலித்து வந்ததாகவும், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததும் தெரியவந்தது.
கல்லூரியில் இருந்து கடந்த 16ம் தேதி வால்பாறை வந்த பரண்யாதேவி தனது வீட்டிற்கு செல்லாமல் காதலனின் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பூட்டிய வீட்டிற்குள் தாலி கட்டி 2 நாள் வாழ்ந்துள்ளனர். பின்னர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளனர்.
வீட்டை வெளிப்புறமாக பூட்டு போட்டு உள்ளே எப்படி இருந்தனர். இவர்களுக்கு யாராவது வெளியே பூட்டு போட நண்பர்கள் உதவியிருக்கலாம். ஆனால் இவர்கள் தற்கொலை செய்தது எதிர்பாராத முடிவாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
காதலனுடன் தற்கொலை செய்து கொண்ட மாணவி பரண்யாதேவி வால்பாறையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தவர். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் பேஷன் டிசைனிங் பாடத்தில் மாநில அளவில் முதல் ரேங்க் பெற்றவர்
0 கருத்து:
கருத்துரையிடுக