உடலுக்கு வெளியே இதயம் தெரியுமாறு பிறந்த பெண் குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆஷ்லி. அவர் 16 வாரங்கள் கர்ப்பமாக இருந்தபோது மருத்துவ பரிசோதனைக்கு சென்றார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் உள்ள கருவுக்கு இதயம் வெளியே இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதை ஆஷ்லியிடம் தெரிவித்தபோது அவர் அதிர்ந்தார்.
கருவைக் கலைத்தல், கருவிலேயே குழந்தையின் மார்பில் துளையிட்டு இதயம் வளர வழிவகுத்தல், இல்லை என்றால் குழந்தையின் இழப்பை ஏற்க தயாராகுதல் என்னும் 3 வழிகளை மருத்துவர்கள் கூறினர்.
ஆனால் ஆஷ்லி எந்த வழியையும் பின்பற்றாமல் குழந்தையை பெற்றார். வழக்கமாக இது போன்ற குறையுள்ள குழந்தைகள் இறந்தே பிறக்கும் அல்லது பிறந்தவுடன் இறக்கும். ஆனால் ஆஷ்லியின் குழந்தை ஆட்ரினா உயிரோடு பிறந்தாள். மேலும் அவளின் இதயத்துடிப்பும் நன்றாக இருந்தது.
இதையடுத்து ஹூஸ்டனில் உள்ள டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் ஆட்ரினாவுக்கு அறுவை சிகிச்சை செய்து இதயத்தை உடலுக்குள் வைத்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆட்ரினா நலமாக உள்ளாள்.
ஆனால் அவள் உடல்நலம் தேறிய பிறகு மேலும் பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளது. அவளுக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு இதய சிகிச்சை நிபுணரின் ஆலோசனை தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக