யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பகுதியில் கஞ்சாப் பொதிகளுடன் கோவில் பூசாரி ஒருவர் கைதாகியுள்ளார். இக் கைதுச் சம்பவம் நேற்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளதாக மேலும் அறியப்படுகிறது.
குறித்த பூசாரி கொக்குவில் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசையில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் இவர் கஞ்சாப் பொட்டலங்களை அவ்வப்போது விற்றுவருவதாக சிலர் கூறிவந்துள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, கோவிலுக்குச் சென்ற பொலிசார் அவரைக் கைதுசெய்துள்ளார்கள். அவரிடம் இருந்து சுமார் 1 KG எடையுடைய கஞ்சாப் பொட்டலங்கள் மீட்க்கப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக