புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஈரோடு பெரியவலசுவை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவிக்கு, நேற்று காலை திருச்செங்கோடு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் அப்பகுதி வாலிபர் ஒருவருடன்
திருமணம் நடப்பதாக முடிவு செய்யப்பட்டது.
திருமணத்துக்கு உறவினர்கள், நண்பர்கள் என பலர் குவிந்தனர்.

முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன், மணமகளை மேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தனர். மணமகன் தாலி கட்ட முனைந்தபோது மணப்பெண் அதை தடுத்தார். அதிர்ச்சியடைந்தார் மாப்பிள்ளை. ‘தாலிக்கொடி மஞ்சள் நிறத்தில் உள்ளது.

இந்த நிறம் எனக்கு ராசி இல்லை. அதனால் திருமணம் செய்ய விருப்பமில்லை’ என்று மணமகள் காரணம் கூற, அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மாப்பிள்ளை வீட்டாரை சமாதானம் செய்து மணமகளின் தங்கையை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

ஆனால் மணமகளின் தங்கையும் மறுத்துவிட்டார். உடனடியாக மற்றொரு உறவினர் பெண்ணை தேடி, திருமணம் நடந்தது. ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், திருமணத்துக்கு மறுத்த பெண்ணிடம் விசாரித்தபோது, ‘8ம் வகுப்பு படிக்கும்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவரை காதலித்தேன்.

அவர் என்னை காதலிக்கவில்லை. இருந்தாலும் அவர் மனம் மாறி என்னை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். அவரை கட்டாயப்படுத்தி எனக்கு திருமணம் செய்ய வைக்க வேண்டாம்’ என்று கூறினார்.

‘திருமணத்திற்கு முன்பே பெற்றோரிடம் இதை கூறியிருக்கலாமே’ என்று போலீசார் அந்த பெண்ணிடம் கேட்டனர். ‘கடைசி நேரத்தில் எப்படியும் அவர் வந்து திருமணத்தை நிறுத்தி, தானே திருமணம் செய்துகொள்வார் என்று நம்பினேன்’ என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.

போலீசார் பெண்ணுக்கு அறிவுரை கூறி அவரது பெற்றோரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top