ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை வெடித்து குழந்தை இறந்தது. ரத்தப்போக்கால் உயிருக்கு போராடிய பெண், ஆசிரியர் வழங்கிய ரத்ததானத்தால் உயிர் பிழைத்தார்.
ராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன்வலசை சுரேஷ் மனைவி களஞ்சியராணி, 23. பிரசவத்திற்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் கர்ப்பப்பை வெடித்து ரத்தப்போக்கு அதிகமானது.
ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. உயிருக்கு போராடிய இவருக்கு, உடனடியாக "பி பாசிடிவ்' ரத்தம் தேவைப்பட்டது. மருத்துவமனையில் இந்த வகை ரத்தம் இருப்பு இல்லை என ஊழியர்கள் கைவிரித்தனர்.
ராமநாதபுரம் மெல்வின் கேட்டரிங் கல்லூரி மாணவர்கள், ரத்தம் கொடுக்க திரண்டனர். இவர்களுக்கு ரத்தவகை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது.தகவலறிந்த குடும்பநல துணை இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறியபின், ரத்தவங்கியில் அவசர தேவைக்காக வைத்திருந்த
ஒரு பாட்டில் "பி பாசிடிவ்' ரத்தம் வழங்கினர்.மேலும் ஒரு பாட்டில் ரத்தம் தேவைப்பட்டது. மெல்வின் கல்லூரி ஆசிரியர் முரளி, உடனடியாக மருத்துவமனை வந்து அதேவகை ரத்தம் வழங்கினார். இதை செலுத்திய பின் களஞ்சிய ராணி, உயிர் பிழைத்தார்.

0 கருத்து:
கருத்துரையிடுக