தென் ஆப்ரிக்காவிலிருந்து ரூ.12.50 கோடி மதிப்புள்ள 220 வைரக் கற்களை கடத்த முயன்ற வாலிபர் பிடிபட்டார்.தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் விமான நிலையத்துக்கு லெபனானைச் சேர்ந்த 25 வயது கொண்ட வாலிபர்
வந்தார். துபாய்க்கு செல்வதற்காக அவர் டிக்கெட் எடுத்திருந்தார்.
அந்த நபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் பட்டை தீட்டப்பட்ட 220 வைரக் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றை சிறிய பிளாஸ்டிக் உறையில் அடைத்து விழுங்கி இருந்தார். அவை 2.25 மில்லியன் டொலர் (ரூ.12.50 கோடி) மதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரியில் இதே போல வைரங்களை கடத்திய லெபனான் வாலிபர் பிடிபட்டார்.
அவர் வயிற்றில் ஒளித்து வைத்திருந்த ரூ.5.40 கோடி மதிப்புள்ள வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
0 கருத்து:
கருத்துரையிடுக