புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கேரளாவின் முக்கிய நகரங்களில் ஒன்று கோட்டயம். இங்குள்ள  கேகே ரோட்டில் எப்போதும் மக்கள் நெரிசல் அதிகம். நேற்று மாலை 6 மணியளவில் வாலிபர் ஒருவர் முழு நிர்வாணமாக சர்வ சாதாரணமாக பைக் ஓட்டி சென்றார். அவரை பார்த்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள்
திசைக்கு ஒரு பக்கம் ஓடினார்கள். நிர்வாண வாலிபரின் பைக் ஓட்டம் குறித்து கோட்டயம் போலீசுக்கு தகவல் பறந்தது.

இதையடுத்து அந்த வாலிபரை பிடிக்க போலீசார் பைக் மற்றும் ஜீப்பில் விரைந்தனர். போலீஸ் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர் பைக்கை மேலும் வேகமாக ஓட்டினார். மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்த பகுதிகளில் புட்ரெஸ்டில் நின்றபடி பைக்கை ஓட்டினார். சுமார் 10 கி.மீ. தூரம் அந்த கோலத்திலேயே பைக் ஓட்டினார். போலீசார் துரத்தியும் பிடிக்க முடியவில்லை.

எம்சி ரோடு வழியாக அந்த வாலிபர் சென்று கொண்டிருந்தார். அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் வாலிபரை மடக்கி பிடித்தனர். ஆனால், அவர்களை தாக்குவதற்கு பாய்ந்தார் வாலிபர். ஆனாலும் பொதுமக்கள் வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர். சிறிது நேரத்தில் போலீசார் அங்கு வந்தனர். வாலிபரை அவர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது போலீசாரையும் தாக்குவதற்கு முயற்சித்தார். அவரை அமுக்கி பிடித்த போலீசார், அவரது உடலில் உடைகளை சுற்றினர். தனது பெயர் கார்த்திக் (32). கோட்டயம் பனசிக்காடு பகுதியை சேர்ந்தவர் என்று முதலில் கூறி உள்ளார். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போதுதான் அவரது உண்மையான பெயர் கோபன் டி நாயர். கோட்டயம் மணற்காடு பகுதியை சேர்ந்தவர் என்று தெரிந்தது. முதலில் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல அவர் நடந்து கொண் டார். ஆனால் தொடர் விசாரணையில் போதை பொருளுக்கு அடிமையானவர் என்று தெரிய வந்தது.

நிர்வாணமாக பைக் ஓட்டுவதாக நண்பர்களுடன் பந்தயம் கட்டிவிட்டு இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். சிங்கவனம் போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top