இங்கிலாந்தில் கற்றலில் குறைபாடு கொண்ட 22 வயது வாலிபரை தங்களது வீட்டுக்குக் கூட்டிச் சென்று, து்பபாக்கி முனையில் அவரிடம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பல்வேறு செக்ஸ் சில்மிஷங்களில் ஈடுபட்டு, அதை வீடியோவில் எடுத்து தங்களது நண்பர்களிடமும்
போட்டுக் காட்டிய காமவெறி பிடித்த இரண்டு இளம் பெண்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பெண்களின் பெயர் யாஸ்மின் மற்றும் ஒயிட்னி நோட்டிஸ். யாஸ்மினுக்கு 19 வயதாகிறது. அவரது அக்காள் நோட்டிஸுக்கு 20வயதாகிறது. இருவரும் பிர்மிங்காமில் வசித்து வருகின்றனர்.
சம்பவ தினத்தன்று இருவரும் 22 வயதான வாலிபர் ஒருவரை தங்களது பிளாட்டுக்குக் கூட்டிச் சென்றனர். அந்த வாலிபர் கற்றலில் குறைபாடு கொண்டவர் ஆவார். பின்னர் பிளாட்டுக்குள் போனதும், போலி துப்பாக்கியைக் காட்டி அந்தவாலிபரிடம் செக்ஸ் சில்மிஷத்தில் இறங்கினர். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பல்வேறு வகையான செக்ஸ் வேலைகளை செய்யச் சொல்லி அந்த வாலிபரை சித்திரவதை செய்துள்ளனர்.
இந்த சேஷ்டைகளை தங்களது பிளாக்பெர்ரி போன் மூலம் வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர். பின்னர் அதை தங்களது நண்பர்களுக்கு அனுப்பி சந்தோஷப்பட்டுள்ளனர்.
அந்த வாலிபர் கொடுத்த புகாரின் பேரில் இரு சகோதரிகளையும் போலீஸார் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினர். இதில் யாஸ்மினுக்கு 7 வருடமும், நோட்டிஸுக்கு 5 வருடமும் சிறைத் தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.
அந்த வாலிபரை இந்த இரு சகோதரிகளும் கைகளைக் காட்டி செக்ஸ் நடவடிக்கைளில் ஈடுபட்டு கஷ்டப்படுத்தியதாக கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவித்தார்.
இந்த இரு சகோதரிகளும் மேலும் பல அப்பாவி ஆண்களை இப்படி சீரழித்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக