திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் நேற்று மாலை இளம்பெண் ஒருவர் உடல் முழுவதும் ரத்தக் காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். இவர் அணிந்திருந்த உடைகள் அனைத்தும் கிழிந்து இருந்தன. இவரை பலர் சேர்ந்து
பாலியல் பலாத்காரம் செய்திருந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இவரை பார்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இவர் பேசக் கூட முடியாத நிலையில் இருந்தார். போலீசார் இவரிடம் மெதுவாக விசாரித்தனர். இதில், அவர் சின்னாளபட்டி பூஞ்சோலையை சேர்ந்த ராசு மனைவி ராமுத்தாய்(30) என்பது தெரிய வந்தது. இன்று அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி ராமுத்தாய் இறந்தார்.
ராமுத்தாய் அம்மி கொத்தும் தொழில் செய்து வந்தார். இவரது வாயில் மதுவை ஊற்றி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர் மயங்கியதும் சிறுமலை அடிவாரத்தில் போட்டு விட்டு சென்று விட்டனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? என்பது தெரியவில்லை. திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக