மகப்பேற்று வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தி பல பெண்களை ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மகப்பேற்று மற்றும் மகளிர் நோய் மருத்துவர் என தன்னை அடையாளப்படுத்திக் பல கர்ப்பமான பெண்களை
பரிசோதித்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கூலி வேலை செய்யும் நபர் ஒருவர், தன்னை மகப்பேற்று வைத்தியர் எனக் கூறி வீடுகளுக்குச் சென்று கர்ப்பமடைந்த பெண்கள் மற்றும் யுவதிகளை பரிசோதித்து வந்துள்ளார்.
குறித்த நபர் கராபிட்டி வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மொரவக்க - வெலிகே பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மேசன் வேலை செய்பவர் என தெரியவந்துள்ளது.
காதல் புரிந்து வல்லுறவு செய்யப்பட்ட யுவதி ஒருவரை பரிசோதனைக்குட்படுத்திய வேளையே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் குறித்து விசாரணை நடத்தியபோது வைத்தியர் என்பதற்கான எவ்வித சான்றுகளும் இவரிடம் இருக்கவில்லை.
எனினும் சந்தேகநபர் ஒருவகை மனநோயாளியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக