மைக்ரோசாப்டின் விண்டோஸ் 8 வெளியான சில நாட்களிலேயே 40 லட்சம் Windows 8 License Download செய்யப்பட்டதாக மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி ஸ்டீவ் பால்மர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த எண்ணிக்கை தனி நபர்கள் தரவிறக்கம் செய்த உரிமங்களின்
எண்ணிக்கை தான். நிறுவனங்கள் பல கோடிக்கணக்கான உரிமங்களை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஓராண்டுக்குள் 40 கோடி புதிய சாதனங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே போன்று விண்டோஸ் 7, 2009ஆம் ஆண்டில் வெளியான பின்னர் 70 கோடி பதிப்புகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக