காதலை ஏற்க பெண் மறுத்துவிட்டதால் வாலிபர் தீக்குளித்து இறந்தார். அம்பத்தூர் அருகே அத்திப்பட்டு பெரிய காலனி பஜனை கோயில் தெருவில் வசித்தவர் ரஞ்சித்குமார் (20). நண்பர்களுடன் தங்கி இருந்து அம்பத்தூர்
தொழிற்பேட்டையில் வேலை செய்தார். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர். ரஞ்சித்குமார் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில், பிற்பகல் வீட்டில் இருந்து புகையுடன் கதறல் சத்தம் கேட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் சென்று கதவை உடைத்தனர். உடல் கருகி உயிருக்கு போராடி கொண்டு இருந்த ரஞ்சித் குமாரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரஞ்சித்குமார் இறந்தார். புகாரின்படி, தொழிற்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரஞ்சித் குமார், ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார். அந்த பெண் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ரஞ்சித் குமார் தற்கொலை செய்துள்ளார் என்று விசாரணையில் தெரிகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக