புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு





சீனாவின் பெய்ஜிங் மாகாண வென்லிங் என்ற நகரில் வசித்து வரும் வயதான சீனத் தம்பதி தாங்கள் வசித்து வந்த வீட்டை நெடுஞ்சாலை நிர்மாணத்துக்காக கொடுக்க மறுத்து விட்டதால், வேறு வழியின்றி அவர்களது வீட்டை மட்டும் விட்டுவிட்டு, அந்த வீட்டைச் சுற்றிலும் நெடுஞ்சாலையை நிர்மாணித்துள்ளனர் அதிகாரிகள். இதனால் நெடுஞ்சாலைக்கு மத்தியில் தனியாக அந்த வீடு மட்டும் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது.

லூ பகோன் மற்றும் அவரது மனைவி மட்டும் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீடு உள்ள பகுதியில் நெடுஞ்சாலையொன்று நிர்மாணிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து காணி சுவீகரிக்கும் பணிகள் இடம்பெற்றன. ஆனால் லூ, அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவாக இருப்பதாக கூறி வீட்டுக் காணியைக் கொடுக்க மறுத்துள்ளார்.

சீன நாட்டுச் சட்டப்படி எந்த ஒரு தனி மனிதரையும் அவரது வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியாது என்பதால் லூவின் வீடு அமைந்துள்ள காணியை அந்நாட்டு அரசாங்கத்தால் கைப்பற்ற முடியவில்லை. இதையடுத்து அந்த வீட்டை மட்டும் விட்டு விட்டு அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட பிற பகுதிகளில் நெடுஞ்சாலை அமைக்க முடிவானது.

அதன்படி நெடுஞ்சாலையும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டது. இப்போது லூவின் வீட்டைச் சுற்றிலும் பிரமாண்டமான நெடுஞ்சாலையொன்று உள்ளது. ஆனால் லூவின் வீடு மட்டும் தனியாக காட்சியளிக்கின்றது. அதாவது சுற்றிலும் நீர் சூழ்ந்த தீவு போன்று லூவின் வீடு வித்தியாசமாக காணப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக லூவின் வீட்டின் சில பகுதிகள் இடிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் இந்த ஐந்து மாடிக் கட்டடத்தில் லூவும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர்.

லூவைப் போன்று சீனாவில் அதிகளவானோர் உள்ளனராம். அரசு கொடுக்கும் இழப்பீட்டுத்தொகை போதவில்லை என்று கூறி தங்களது வீட்டுக் காணிகளை அரசுக்கு கொடுக்க மறுத்து தங்களது சொந்த இடங்களிலேயே தங்கியுள்ளனராம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top