திருப்பூர் அடுத்த படியூர் சிவகிரிபுதூரை சேர்ந்தவர் மயில்சாமி (45). பிரின்டிங் பட்டறை தொழிலாளி. மனைவி, இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணமாகி தனியேவசிக்கிறார். 2வது மகன் கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி மணியாள்(50). இவருக்கு குழந்தைகள், பேரன், பேத்திகள் உள்ளனர். இந்நிலையில் மயில்சாமிக்கும், மணியாளுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். இவர்களது பழக்கம் இருவரின் வீட்டுக்கும் தெரிந்து இருவரது குடும்பத்திலும் எதிர்ப்பு எழுந்தது. 3 தினங்களுக்கு முன் மயில்சாமியும், மணியாளும் வீட்டை விட்டு வெளியேறி அந்தியூர் அடுத்த அத்தாணி - சத்தி மெயின் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்தனர்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தனர். அங்கு இருவரும் மயங்கி கிடந்தனர். அருகில் பூச்சி மருந்து பாட்டில் கிடந்தது. இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்ததில் இருவரும் இறந்து விட்டது தெரிந்தது.
கள்ளக்காதல் ஜோடி எழுதி வைத்த கடிதத்தில், ‘நாங்கள் இருவரும் ஒருமனதாக இந்த தற்கொலை முடிவை எடுக்கிறோம். எங்களின் இந்த முடிவிற்கு யாரும் காரணமில்லை. யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம்“ என எழுதப்பட்டிருந்தது

0 கருத்து:
கருத்துரையிடுக