புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தெற்கு டெல்லியில் தமது வீட்டு கேட் முன்பாக சிறுநீர் கழித்ததைத் தட்டிக் கேட்டதால் பக்கத்து வீட்டுக்காரர் துப்பாக்கியால் சுட்டு பள்ளிக்கூட மாணவி பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.


தெற்கு டெல்லியில் ஹசரத் நிஜாமுதீன் பகுதியில் வசித்து வருபவர் சத்மானி (வயது 40). இவரது மகள் பின்னோ, 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டுக்காரரான ஜாவேத் என்பவர் நேற்று சத்மானி வீட்டு கேட் முன்பாக சிறுநீர் கழித்திருக்கிறார். இதை தாய் சத்மானி தட்டிக் கேட்டிருக்கிறார். ஆனால் ஜாவேத்தோ சத்மானியை மிகக் கேகவலமாகப் பேசி தகாத முறையில் நடக்க முயன்றிருக்கிறார். இதனால் அவரது மகள் பின்னோவும் வீட்டை விட்டு வெளியே வந்து தடுக்க முயற்சித்திருக்கிறார்.

அப்போது சட்டென தாம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தாயையும் மகளையும் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டான் ஜாவேத். இருவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால் பின்னோ ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். தாய் சத்மானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜாவேத்தை தேடி வருகின்றனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top