யுத்தத்திற்கு பின்னர் யாழில் கலாச்சாரம் என்ற பெயருக்கே இடம் இல்லாமல் போய்விட்டது.
காதல் என்ற பெயரில் இளசுகள் பல சீர்கேடுகளுக்கு உட்படுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் நாளாந்தம் பல்வேறு பாலியல் பலாத்கார நிகழ்வுகள் இடம்பெறுகின்ற போதிலும் இத்தகைய நிகழ்வுகள் காலம் கடந்த பின்னரே தெரிய வருகின்றது. குறிப்பாக வைத்தியசாலைகளில் வேறு நோய்களுக்கு மருத்துவ சிகிச்சைக்குச் செல்லும் வேளையில் இவைகள் தெரியவந்து முறைப்பாடுகளை செய்யும் நிகழ்வகளே அதிகமாகக் காணப்படுகின்றன.
இத்தகைய ஆறு சம்பவங்கள் கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் யாவும் சுமார் ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பகுதயில் இரண்டு சம்பவங்களும் கோப்பாய் பொலிஸ் பகுதியில் ஒரு சம்பவமும் கொடிகாமம் பகுதயில் ஒரு சம்பவமும் வட்டுக்கோட்டை பாலிஸ் பகுதியில் ஒரு சம்பவமும் இடம் பெற்றுள்ளன.
இச்சம்பவங்களின் பிண்ணனியில் காதல் எனக்கூறி அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்க்கு பெண்ணும் சம்மதித்துச் சென்ற நிலமையே காணப்படுகின்றது. இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மல்லாகம் சாவகச்சேரி நிதிமன்றங்களில ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இத்தகைய குற்றச் செயல்களை செய்வதில் காதலர்கள் மற்றும் உறவினர்களே ஈடுபட்டுள்ளார்கள். பொதுவாக பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகள் விடயத்தில் அதிக கவனம் செலுத்துவதுடன் உறவினர்கள் அயலவர்கள் பெண் பிள்ளைகள்மீது தேவையற்ற முறையில் அதிக அக்கறை காட்டுவதாக இருந்தால் அந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்து வேண்டும் எனவும் யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எரிக்பெரெரா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பல குற்றச் செயல்கள் யாழில் இலைமறை காய்களாக காணப்படுகின்றன

0 கருத்து:
கருத்துரையிடுக