இன்றைய அவசர உலகில் இயந்திரமாய் மாறிப்போன வாழ்வில் உடனடி உணவுகளே (Fast foods) பிரபலமாகிவருகின்றன.அவ்வகையில் உடனடி உணவுகளில் முதன்மை பெறுவது இந்த பீட்சா ஆகும். நம்ம ஊர் கோதுமை ரோட்டியின் அப்டேட் வேர்சன் தான் இந்த பீட்சா.
மனித உடலுக்கு நாளடைவில் தீங்கை விளைவிப்பதாயினும், இவ் அவசர உலகில் பீட்சா போன்றவை தவிர்க்க முடியாதனவாய் மாறிப்போய்விட்டன.பீட்சாவை எவ்வாறு தயார் செய்கிறார்கள் என்பதை பற்றியதே இந்தப் பதிவு.
பீட்சா தயாரிப்பில் முக்கிய படிமுறை அதன் அடிப்பகுதியான கோதுமை ரொட்டி தயாரிப்பது ஆகும். இயந்திர உதவியுடன் குழைக்கப்பட்ட கலவை மா, தயாரிப்பாளரால் தராசு மூலம் குறித்த நிறையில் வெட்டியெடுக்கப்படுகிறது.
பின்னர் அது இயந்திரம் மூலம் சம கனதடிப்புள்ள வட்டத்தட்டாக மாற்றப்படுகிறது. பின்னர் இலேசாக வெதுப்பப்பட்டு வெளியே எடுக்கப்படுகிறது.
அந்த ரொட்டியில் முதலில் சோஸ் தடவப்படுகிறது. பின்னர் சீஸ் துருவல் இடப்படுகிறது. அதன்பின்னர் எவ்வகையான பீட்சாவோ அதுக்கமைய காய்கறி துண்டுகளும், இறைச்சித் துண்டுகளும் இடப்படுகின்றது.
பின்னர் மீண்டும் வெதுப்பப்பட்டு துண்டுகளாக வெட்டப்பட்டு பரிமாறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக